GuidePedia

அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ ஆரம்பித்துள்ள ‘சிரிலிய சவிய’ வங்கிக் கணக்கு மற்றும் கார்ல்டன் முன்பள்ளிக்கு லட்ச கணக்கில் பணம் வைப்பிலிட்டமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சிரிலிய சவிய வங்கிக் கணக்குடன், கொடுக்கல் வாங்கல் மேற்கொண்ட 47 வங்கிகளிடமும் அவற்றுடன் தொடர்புடையவர்களிடமும் விசாரணை நடத்துமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார். அதற்கமைய இவ்விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவன்கார்ட் நிறுவனத் தலைவர்,
கார்ல்டன் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் சிரிலிய வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டன. அது தொடர்பிலேயே குறித்த விசாரணைகளை இடம்பெற்றன எனக் குறிப்பிட்டார்



 
Top