ஜனாதிபதியின் பாதுகாப்பு தற்பொழுது பொலிஸ் பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் காணப்பட்ட பொலிஸார் இன்னும் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர், அப்பிரிவிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜி.வி. ரவிப்பிரிய நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
