GuidePedia

19வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ் அரசியல் அமைப்பு சபை விரைவில் அமைக்கப்படும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு நியமனங்களும் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையில் சபாநாயகர், பிரதம மந்திரி, எதிர்கட்சி தலைவர் உட்பட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூன்று சுயாதீன உறுப்பினர்களும் உள்ளடங்குவர்.
இந்தநிலையில் இந்தமாத இறுதிக்குள் அரசியலமைப்பு சபை ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.



 
Top