(ஏ.கே. மிஸ்பாஹுல் ஹக்)
உள்ளூராட்சி மன்றமானது சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள்க் கோசமாக இருந்து வருகிறது.இதனை பல வழிகளில் சாய்ந்தமருது மக்கள் பெற முயற்சித்து வருகின்ற போதும் மு.கா இன்றி யாரினாலும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.இதனை சாய்ந்தமருது மக்களும் அறிந்து தங்கள் முயற்சிகளினை எடுப்பதே அறிவுடமையாகும்.இக் கோசம் போன்றே சாய்ந்தமருதிற்கென்ற ஒரு பிரதேச செயலகத்தினை அமைக்கக் கோரி பல வழிகளிலும்முயற்சி செய்தார்கள்.இறுதியில் மு.கா தான் பெற்றுக் கொடுத்தது.
சில சில்லறை அரசியல் வாதிகள் ஓரிரு தையல் இயந்திரங்களினைப் கொடுத்து விட்டு சாய்ந்தமருது மக்களின் வாக்குகளினை குறி வைக்கின்றார்கள்.இதனை சாய்ந்தமருது மக்கள் நன்கு அறிந்து கொண்டு எதிர் வரும் தேர்தல்களிலே செயற்பட வேண்டும்.முன்னாள் கல்முனை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இன்று உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும் நாளை உள்ளூராட்சி மன்றம் வழங்கப்படும் என்று சாய்ந்தமருது மக்களினை தன் வசப்படுத்த முயன்றார்.உள்ளூராட்சி அமைச்சராக இருந்த அதாவுல்லாஹ்வின் கரங்களினை பற்றிப் பிடித்திருந்த காலத்திலேயே இவரினால் இதனை பெற்றுக் கொள்ள முடியாது என்றால் இவரினால் இக் கோரிக்கை சாத்தியமானதா?