GuidePedia

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூன் 1ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இன்று அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நயந்த சமரதுங்க முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றிருந்தார்.

அவரை சோதனை செய்தே பொலிஸார் உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் கடமையில் இருந்த உதவி பொலிஸ் அதிகாரியும் சார்ஜன் ஒருவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இராணுவ கொப்ரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top