GuidePedia


புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இலவசமாக சேமிக்க வகை செய்யும் ‘கூகுள் போட்டோ’ என்ற புதிய App மற்றும் இணையதளதை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.

ஆண்டுதோரும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் கூகிள் I/O என்ற மாநாட்டை நடத்தி வருகிறது கூகுள் நிருவனம். வழக்கமாக இந்த மாநாட்டில் முக்கிய அறிப்புகளை கூகுள் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டு ‘கூகுள் போட்டோ’ என்ற புதிய App மற்றும் இணையதளதை அறிமுகம் செய்தது. 

கூகுள் போட்டோ அப் ஆன்ராய்ட்டு போன்கள், ஆப்பிள் போன்கள் மற்றும் கணினிகள் ஆகிவற்றில் இயங்கும். இதில் உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் எந்தவித வரம்பும் இல்லாமல் பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த புதிய வசதி நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.



 
Top