GuidePedia

முல்லைத்தீவில் உள்ள மூன்று கிராமங்களுக்கான தடைப் பட்டிருந்த பேரூந்து சேவை பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூகின் முயற்சியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இ.போ.ச முல்லைத்தீவு சாலைக்கு  பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் அண்மையில் விஜயம் செய்திரிந்தார்.

இதன்போது நீண்ட காலமாக போக்குவரத்து தடைபட்டிருந்த குமுழமுணை, முத்தயன் கட்டு மற்றும் புது மாத்தளான் ஆகிய கிராமங்களுக்கான பேரூந்து சேவையை அவர் ஆரம்பித்துவைத்தார். 

அத்துடன் இங்கு நிலவும் குறைபாடுகள் பற்றி அவர் கேட்டறிந்ததோடு சாலை பெறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களுடன் அரைமணி நேரம் கலந்துரையாடி ஊழியர்களால் சுட்டிக் காட்டப்பட்ட முக்கிய சில பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு  கொண்டு உரிய தீர்விணையும் பெற்றுக் கொடுத்தார்.  

பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசின் பெயரில் நியமணங்கள் வழங்கப்பட்டு முல்லைத்தீவு சாலையில் கடமையாற்றும் நடாத்துனர்கள் மற்றும் சாரதிகளையும் இதன்போது சந்தித்து கலந்துரையாடினார்.




(படமும் தகவலும் - றிப்கான் கே சமான்.)



 
Top