GuidePedia

(றிப்கான் கே சமான்)
மன் / அாிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் (நவோதயா) பாடசாலையின் வகுப்பறைக் கட்டிடத்தை ஹுனைஸ் பாறூக் எம்.பி  திறந்து வைத்தார். 

மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட மன் / அாிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் (நவோதயா) பாடசாலைக்கு அண்மையில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும் , தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் பிரதித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் இவ்வகுப்பறைக் கட்டிடத்தை உத்தியோக புர்வமாகத் திறந்துவைத்து மாணவர்களின் பாவணைக்காக கையளித்தார்.

பழுதடைந்து மாணவர்கள் பயன்படுத்த முடியாதளவு சேதமடைந்துள்ள கட்டிடத்தை புணர்நிர்மானம் செய்வது தொடர்பில்  கடந்த ஆண்டு இப்பாடசாலை அதிபரினால் பாராளுமன்ற உறுப்பினரின் கவணத்திற்கு கொண்டுவரப்பட்டதற்கு இனங்க இக்கட்டிடம்  பாராளுமன்ற உறுப்பினரால் புணர்நிர்மானம் செய்யப் பட்டுள்ளது.

இதற்கான பெருந்தொகை நிதியை  பாராளுமன்ற உறுப்பினர் தனது  பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கியிருந்தார்.

பகுப்பறைக் கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக பாடசாலைக்குச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு அதிபர் மாலை அணிவித்ததோடு பாடசாலை சமூகத்தினரால்  மிகுந்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.



 
Top