GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆட்சி பீடமேற்றும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்தவின் புதல்வருமான நாமல் ராஜபக்ச பங்கேற்காதது ஏன் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்தும் நான் கவலையடைகின்றேன்.

அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக கடமையாற்றினார். மூன்றாவது தடவை மக்கள் நிராகரித்தனர்.

எனவே அவர் அமைதியாக இருந்து கொண்டு கட்சியை வழிநடத்தும் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ள சிறு கட்சிகளினால் தனித்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றியீட்ட முடியாது.

அவர்கள் தான்முன்னாள் ஜனாதிபதியை பயன்படுத்திக் கொண்டு தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றனர்.

மிகவும் முக்கியமான விடயம் என்னவென்றால் முன்னாள் ஜனாதிபதியை பதவியில் அமர்த்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் நாமல் பங்கேற்கவில்லை என அர்ஜூன ரணதுங்க சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.



 
Top