GuidePedia

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு நேற்று 70 ஆவது அகவை. எதிர்பார்த்து இராத திடீர் யோகம் இவருக்கு பிறந்த நாளில் அடித்து உள்ளது.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரட்ண உலக சுகாதார ஸ்தாபனத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள ஜெனிவா புறப்பட்டு சென்று உள்ளார். இவர் இரு வாரங்களில் நாட்டுக்கு திரும்பி வருவார்.
சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சரான ஹசன் அலி இந்நிலையில் நேற்று முதல் சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை பதில் அமைச்சராக உயர்வு பெற்று உள்ளார்.
பிரதமரின் அலுவலகத்தில் இருந்து பதவி உயர்வு நிலைக் கடிதம் இவருக்கு கிடைக்கப் பெற்று உள்ளது. இன்று இவர் புதிய பொறுப்பை சம்பிரதாயபூர்வமாக கொழும்பில் ஏற்றுக் கொண்டார்.



 
Top