GuidePedia

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனநாயக கட்சி தனியாக போட்டியிடுவதற்கு தீர்மானித்து வருவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் கெப்டன் கயான விதானகே தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய செவ்வியில் இந்த தகவலை வெளியிட்டார்.
இதனூடாக கட்சியினை வலுவடைய செய்வதற்கான நடவடிக்கைகள் இந்நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்றி ஏனைய அனைத்து ஆசனங்களுக்காகவும் அமைப்பாளர்கள் நியமித்துள்ளதாகவும் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக கட்சி ஆர்வலர்களை விழிப்புணர்வு செய்வதற்காக பல்வேறு கூட்டங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இன்றி ஏனைய மாகாணங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
மார்ச் மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டங்கள் இம்மாதம் 13ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனி அரசியல் கட்சியாக போட்டியிடுவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



 
Top