(க.கிஷாந்தன்)
பொலனறுவையில் யானைகளின் இயற்கையான வாழ்விடத்திற்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் (யானை சஃபாரி) வாகனங்களின் சாரதிகளுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் யானைகளை அவற்றின் வாழ்விடங்களில், மிக அருகிலேயே கண்டு ரசிக்கக்கூடிய வாய்ப்புக் கிட்டியுள்ளது.
மூன்று நாட்கள் இடம்பெற்ற பயிற்சியின் நிறைவிலேயே 100 வாகன சாரதிகளுக்கு இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இந்த பயிற்சியின் நிறைவின் போது மின்னேரியா யானைகள் சரணாலயத்தில் இவர்களுக்கான பயிற்சி நிகழ்வு இடம்பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் முதன் முறையாக இவ்வாறான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகின்றது.