GuidePedia

டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் இடையில் அனுஷ்காவை சந்தித்ததாக பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி மீது விதிமீறல் புகார் எழுந்துள்ளது.
நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி- பெங்களூர் அணிகள் மோதின. இந்தப் போட்டியைக் காண கோஹ்லியின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா வந்திருந்தார்.
அவர் விஐபிகள் இருக்கையில் அருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது பெங்களூர் அணி துடுப்பெடுத்தாடும் போது மழை பெய்தது.
இதனால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதும் கோஹ்லி நேராக பார்வையாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது காதலி அனுஷ்காவை சந்தித்து கட்டிப்பிடித்து சிரித்துப் பேசி மகிழ்ந்தார். இதை பெரிய திரையிலும் காண்பித்தனர்.
இந்நிலையில் கோஹ்லி ஊழல் தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறி அனுஷ்காவை சந்தித்து பேசியுள்ளார் என்று ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் தெரிவிக்கப்படும் என்றும் அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
அதாவது, போட்டி முடியும் வரை வீரர்கள் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி கிடையாது. அப்படி இருக்கையில் கோஹ்லி, அனுஷ்காவை சந்தித்து பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து போட்டியை நேரில் பார்த்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், கோஹ்லி ஊழல் தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறியதாக எங்களுக்கு புகார் வரவில்லை என்றும், அப்படி வந்தால் அவரை எச்சரிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.



 
Top