இந்தியா முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1826-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு வெயிலின் உக்கிரம் தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த கோடைக்காலத்தில் நாட்டின் பல மாநிலங்களில் உச்சக்கட்ட வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 440 பேர் பலியாகினர். ஆந்திராவில் இந்த எண்ணிக்கை 1300 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே வெயிலுக்கு இவ்விரு மாநிலங்களில் தான் அதிகமானவர்கள் பலியானதாக தெரியவந்துள்ளது.
இவ்விரு மாநிலங்களை தவிர ஒடிசாவில் 43 பேரும், குஜராத்தில் 7 பேரும் டெல்லியில் 2 பேரும் வெயிலுக்கு பலியாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
இரு மாநிலங்களிலும் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1700 கடந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. தொழிலளர்கள் குறிப்பாக காலை 11.30 முதல் மாலை 4 வரை வேலை செய்ய வேண்டாம் என ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகள் அறிவுறித்தியுள்ளன.