இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிணக்குகளை தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்திய மீனவப்பிரதிநிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் அதிகாரிகள் இந்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தி பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.