GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
வில்பத்து காட்டுள் அத்துமீறிய குடியேற்றங்கள் உள்ளனவா என்பதை ஆராயவும்> புலிகளால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அனைவரையும் சகல வசதிகளுடன் குடியேற்றவுமான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் படி உலமா கட்சி ஜனாதிபதிக்கும்>பிரதமருக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில குறிப்பிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது>

1990 ம் ஆண்டு வட மாகாணத்தில் உடுத்த உடையுடன் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் கடந்த ஆட்சியின் போது மீள் குடியேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையானதாகும். அவர்களுக்கு சகல நஷ்ட ஈடும் வழங்கி சொந்த இடங்களிலும்> சொந்த இடம் இல்லாதவர்களுக்கு அதற்குரிய காணி வழங்கி குடியேற்ற வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக உலமா கட்சி குரல் எழுப்பி வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த அரசாங்கத்தின் போது வில்பத்து காட்டை அழித்து முஸ்லிம்கள் குடியேறுவதாக சில ஊடகங்களும் அமைப்புக்களும் குற்றம் சாட்டின. இது கடந்த அரசின் இன வாத போக்கு என நாம் நினைத்தோம். ஆனால்  நல்லாட்சி என சொல்லப்படும் இந்த ஆட்சியிலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களும் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தடையும் ஏற்படுவதை காண்பதோடு அவை உண்மையா இல்லையா என்பதைக்கூட ஜனாதிபதியோ பிரதமரோ பகிரங்கமாக மக்களுக்கு சொல்லாமல் இருப்பது நாட்டு மக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக தெரிகிறது.

வட மாகாண முஸ்லிம்கள் வில்பத்துவில் குடியேறுகிறார்களா என்பது பற்றி நாம் ஆராய்ந்த போது அவ்வாறு இல்லை என்றும் சிங்கள குடியேற்றங்களே வில்பத்துவில் நடப்பதாக அமைச்சர் ரிசாத் தரப்பு சொல்கிறது. அவரது கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரங்களும் கிடைத்துள்ளன. ஆக வில்பத்து காடழிப்பை முஸ்லிம்கள் செய்யவில்லை என்பதும் சில அரச அதிகாரிகள் உதவியுடன் சிங்கள மக்களே செய்கிறார்கள் என்பதும் தெரிகிறது.

நாட்டில் யுத்தம் நிறைவு பெற்றும் வட மாகாண முஸ்லிம்கள் இன்னமும் சொந்த காணி பெற்று மீள் குடியேற்றப்படவில்லை என்பது கவலையானது. மஹிந்த ராஜபக்சவின் அரசு இனவாதமாக செயற்படுகிறது என்ற குற்;றச்சாட்டிலேயே 95 வீதமான முஸ்லிம்கள் ஜனாதிபதி மைத்திரிக்கு வாக்களித்தார்கள். அப்படியிருந்தும் இந்த ஆட்சியிலும் அம்மக்களுக்கு விமோசனம் இல்லாமல் இனவாதமாக பார்க்கப்படுவதன் மூலம் வடக்கு முஸ்லிம்கள் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக உள்ளது. அம்மக்களின் பிரதிநிதியான அமைச்சர் ரிசாத் பதியுதீன் 2004 முதல் அமைச்சராக இருந்தும் அம்மக்கள் குடியேற்றப்படவில்iலை என்பதன் மூலம் அவரும் அவரது கட்சியும்  சரியான முறையில் செயற்படவில்லை என்பதும் இவர்கள் முஸ்லிம்களை ஏமாற்றியே வாக்கு பெற்றுள்ளார்கள் என்பதும் தெளிவாகிறது.

ஆகவே வில்பத்து காட்டுள் அத்துமீறிய குடியேற்றங்கள் உள்ளனவா என்பதை ஆராயவும்> புலிகளால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அனைவரையும் சகல வசதிகளுடன் குடியேற்றவுமான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அவசரமாக நியமிக்கும் படி முஸ்லிம் உலமா கட்சி ஜனாதிபதியையும்ää பிரதமரையும் கேட்டுக்கொள்வதுடன் அந்த ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகளும் இடம் பெறச்செய்யும் படியும் கேட்டுக்கொள்கிறது.



 
Top