ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் கட்டுமான பணியாளர்கள் இன்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து தகவல் அறிய ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஜூப் வாகனத்தில் அங்கு சென்றுள்ளனர்.
அதன்போது பொலிஸ் ஜூப், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் மீது மோதியுள்ளது. காயமடைந்த நபர் ஹம்பாந்தோட்டை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அதன்பின் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் ஜீப் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.