முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை அலரி மாளிகைக்கு அருகில் ஆதரவாளர்கள் சகிதம் திடீரென்று தோன்றினார்.
இவர் தொழிற்சங்கவாதி ரி. பி. இலங்கரட்ணவின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இவருடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சுசில் பிரேம்ஜயந்தவும் கூடவே சென்று இருந்தார்.
இவர் மஹிந்த ராஜபக்ஸவின் பெருமைகளை பேசி உரையாற்றினார்.
இதே நேரம் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அடங்கலாக கொழும்பில் பல ஊர்வலங்களும் இடம்பெற்றன.
