(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் அண்மையில் இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைகளின் மூலமாக இலங்கை கால்நடை உற்ப்பத்தி சுகாதார திணைக்களத்திற்கு கால்நடை வைத்தியர்களாக உள்வாங்கப்பட்டவர்களில் 29 பேர் கிழக்கு மாகாணத்தில் பணிபுரிவதற்காக பணிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களப் பணிப்பாளர் டாக்டர் எம்.ஏ.எம்.பாஸியின் பூரண திட்டமிடல் மற்றும் வழிகாட்டுதல்களின் கீழ் மூன்று மாத உள்ளக சேவை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மேற்படி பயிற்சிகளின் நிறைவில் வெற்றிடங்கள் நிலவும் பிரதேசங்களுக்கு கால்நடை வைத்தியர்களாக இவர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தது.
