GuidePedia

பாரியளவில் நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அபய ரணசிங்க ஆராச்சிகே வீரகுமார எனப்படும் சக்வித்தி ரணசிங்க சிறையில் இருந்து கொண்டே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றார்.
2015ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றுகின்றார்.
சிறைக் கைதிகளில் சக்வித்தி மட்டுமே இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றுகின்றார்.
கலைப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றும் சக்வித்தி, சிங்கள மொழியில் பரீட்சைக்குத் தோற்றுகின்றார்.
மகசீன் சிறைச்சாலை பரீட்சை மத்திய நிலையத்தில் அவர் பரீட்சைக்குத் தோற்றுகி;ன்றார்.
பதினைந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சக்வித்தி ரணசிங்க பிரபல ஆங்கில பாட ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையிலும் கைதிகளுக்கு ஆங்கில பாட பிரத்தியேக வகுப்புக்களை சக்வித்தி நடத்தி வருகின்றார்.



 
Top