GuidePedia


இனிவரும் காலங்களில் இலங்கையில் கடவுச்சீட்டில், கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 



இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது கைவிரல் அடையாளங்களை, தலைமை அலுவலகத்திற்கு அல்லது பிராந்திய அலுவலகங்களுக்கு வந்து வழங்க வேண்டும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். 



எதுஎவ்வாறு இருப்பினும் பழைய கடவுச் சீட்டுக்கள் இரத்துச் செய்யப்பட மாட்டாது எனக் குறிப்பிட்ட அவர், புதிய கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் கூறியுள்ளார். 



 
Top