GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் அழிவை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து இன சமூகங்களும் சமாதானமாக வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட வேண்டும்.
ஒரே நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதே ஜனநாயகக் கட்சியின் நோக்கமாகும்.
பத்து அம்ச திட்டத்தின் அடிப்படையில் இம்முறை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறுபான்மை இன சமூகத்தைச் சேர்ந்த ரகர் வீரர் தாஜுதீன் மரணம் பற்றிய முக்கிய உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச சிங்கள மக்களிடம் ஒன்றையும், தமிழ் மக்களிடம் ஒன்றையும், முஸ்லிம் மக்களிடம் வேறு ஒன்றையும் கூறி பிரச்சாரம் செய்து வருகின்றார்.
இந்த ஏமாற்று வேலைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதியே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
தொடர்ந்தும் மஹிந்தவினால் மக்களை ஏமாற்ற முடியாது என சரத் பொன்சேகா பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.



 
Top