GuidePedia

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் தற்போதைய நிலை தொடர்பில் சர்வதேச இணையதளங்கள் பல கவனம் செலுத்தியுள்ளன.
விசேட கடிதம் ஒன்றை வெளியிட்ட சர்வதேச ஊடகம், கொலை மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் தேர்தல் போராட்டத்தில் வந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் முன்னாள் ஜனாதிபதிக்கு கடுமையான நெருக்கடி என்பதனை அவர் தாஜுடீனின் கொலை தொடர்பில் கருத்த வெளியிடுவதன் மூலம் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைக்கமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்சவை விட 10 மடங்கு முன்னிலையில் இருப்பதாகவும் குறித்த இணையதளங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி 100க்கு 27 சதவீதம் மாத்திரமே மக்கள் பாராட்டை பெற்றுக்கொண்டுள்ளதாக இந்திய இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க 100க்கு 40 சதவீதம் மக்கள் பாராட்டை பெற்று முன்னிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமராவதற்கு பல தடைகள் காணப்படுவதாக மற்றுமொரு இந்திய இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ராஜபக்சவின் மகன்மார்களின் நடவடிக்கைகளினால் மஹிந்த ராஜபக்ச மீது மக்கள் அதிருப்த்தியடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய இணையதளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. தாஜுடீனின கொலை சம்பவம் இதற்கு சிறந்த உதாரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.



 
Top