GuidePedia

யுத்தகாலத்தில் மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து கொழும்புக்கு 6 கிலோகிராம் ஹெரோய்னை கடத்தி, தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ மேஜரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றத் நீதிபதி லலித் ஜயசூரிய- அவருக்கு நேற்றுப் புதன்கிழமை சாகும்வரை கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.  
இந்தக் குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டும். எனினும், அந்தத் தண்டனை புத்தகத்துக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதனைச் செயற்படுத்தவேண்டிய நிறுவனம் அமைதியை கடைப்பிடிப்பதனால் மரணதண்டனை விதிப்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார். 
சாகும் வரை கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டவர், யுத்தக்காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சீருடையின் சென்று 15 கிலோகிராம் ஹெரோய்னை, தனியார் பஸ்ஸொன்றில் கொழும்புக்கு கொண்டுவந்துகொண்டிருந்த போதே அவரை பறயநாளன்குளம் பொலிஸ் சோதனைச்சாவடியில் வைத்து 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.
காலி, அம்பேத்தகமையை வசிப்பிடமாகக்கொண்ட முன்னாள் இராணுவ மேஜரான கமல் சாந்த காரியவசம் என்பருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



 
Top