GuidePedia

(க.கிஷாந்தன்)

கொழும்பு நகரத்தில் தொழில் புரியும் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்குமிடையில்  தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும், சந்திப்பும் கொழும்பு புதிய செட்டி வீதியிலுள்ள ஸ்ரீ ராம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது தேர்தல் தொடர்பாக சுதந்திர கூட்டமைப்புடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக  இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதேவேளை இம்முறை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடும் இ.தொ.கா வேட்பாளர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், அனுஷியா சிவராஜா ஆகியோர்களால் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவான விளக்கமளிக்கப்பட்டதோடு  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கொழும்பு மாவட்ட முன்னால் பாராளுமன்ற  உறுப்பினர் பிரபாகனேஷன், கொழும்பு மாவட்ட வேட்பாளர் குமரகுருபரன் ஆகியோரும் கலந்துக் கொண்டதை இங்கு படங்களில் காணலாம்.







 
Top