GuidePedia

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நேற்று மாலை ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நீராவியை குளிர்விப்பதற்காக தண்ணீர் செல்லும் குழாயின் பாதையில் பழுது ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்யும் பணிகள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வணிக ரீதியிலான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. 112 நாட்களாக தொடர்ந்து முதல் அணு உலையில் மின் உற்பத்தி நடைபெற்று வந்ததாகவும், இன்னும் மூன்று நாட்களுக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பிக்கப்படும் எனவும் கூடங்குளம் அணுமின் நிலை வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.



 
Top