அம்பாறை, லஹுகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் ஆயுத முனையில் 9 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பணமும் ஒரு அலைபேசியும் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலைப் பிரதேச வாசிகளான அருணாசச்லம் பாஸ்கரன் (வயது 25) மற்றும் மாசிலாமணி சுருகன்னி (வயது 32) ஆகிய இருவரிடமும் கட்டுத் துவக்கு மற்றும் கிறீஸ் கத்திகளைக் காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த 9 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பணமும் ஒரு அலைபேசியும் அபகரிக்கப்பட்டதாக தெரிவித்து லஹுல பொலிஸில் முறைப்பொடொன்று செய்யப்பட்டது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அபகரிக்கப்பட்ட அலைபேசியை தம் வசம் வைத்திருந்த லஹுகல – உஹனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹெற்றிராலகே புஞ்சிபண்டா (வயது 49) என்பவரை நேற்று (சனிக்கிழமை) கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் மூவர் தொடர்புபட்டிருந்ததாக பணத்தையும் அலைபேசியையும் பறிகொடுத்தவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக லஹுகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
