மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பம் மீது சுமத்தப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு தொடர்பான குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் அரசியல் வாழ்விலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதியின் புதல்வனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் இந்த சொத்து விபரம் குறித்த உத்தேச தகவல்களை ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே பா.உ. நாமல் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
