GuidePedia

கொழும்பில் தாஜ் சமுத்திராவில் நேற்றுமாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான செய்தியாளர் மாநாடு இரண்டு கேள்விகளுடன் முடிவடைந்தமை ஊடகவியலாளர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை அளித்தது. அமெரிக்க தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்த செய்தியாளர் மாநாட்டிற்காக 4 மணி முதல் ஊடகவியலாளர்கள் காத்திருந்த நிலையில் 6.30 மணியளவிலேயே செய்தியாளர் மாநாடு ஆரம்பமானது.
அதுவும், இரண்டு கேள்விகளுடனேயே முடிவடைந்தது. ஊடகவியலாளர்கள் இரு கேள்விகளை மாத்திரம் கேட்க அனுமதிக்கப்பட்டனர் அதில் ஒன்று மாத்திரமே இலங்கை பற்றிய கேள்வியாகும். அத்துடன், கெரி செய்தியாளர் மாநாட்டை முடித்துக் கொண்டு வெளியேறினார்.



 
Top