GuidePedia

நியூசிலாந்தின் தெற்கு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பல வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.
இதனால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடியதுடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
அங்கு 5.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, பூமிக்கு அடியில் 10 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தெற்கு தீவில் வனாகா என்ற நகரம் சுற்றுலா மையமாகும் இங்கு 6,500 மக்கள் வசிக்கின்றனர்.
இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.



 
Top