நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்காகச் சென்ற இலங்கை இராணுவத்தினர் சுமார் 2000 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளதாக பிரதமரின் ஊடக்கப் பிரிவு அறிவித்துள்ளது.
தற்பொழுது படையினர் மிகவும் கஷ்டப் பிரதேச கிராமங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக இவ்வுதவிப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற தளபதி மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ் தெரிவித்துள்ளார்.
இறுதியாக இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பாதைகளைச் சரிசெய்யும் பணியிலும் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று வெசாக் தினமாக இருப்பதனால், விகாரைகளுக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் படையினர் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
