GuidePedia

கேரள மாநிலம் திருச்சூர் சரக போலீஸ் ஐ.ஜி. டி.ஜே ஜோஸ். இவர் மகாத்மாகாந்தி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.எம். என்ற சட்ட மேற்படிப்பு படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு கொச்சி களமாச்சேரியில் உள்ள செயின்ட்பால் கல்லூரியில் தேர்வு எழுதினார்.
அப்போது துண்டு சீட்டு வைத்து காப்பி அடித்ததை தேர்வு அறையின் கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். அவர் இதுபற்றி பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்க, போலீஸ் ஐ.ஜி. ஜோஸ் தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து அவரை கட்டாய விடுப்பில் செல்ல மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டார். மேலும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே ஐ.ஜி. ஜோஸ் காப்பி அடித்தது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவின்பேரில் துணை பதிவாளர் தேர்வு நடந்த கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதில் ஐ.ஜி. ஜோஸ் தேர்வில் காப்பி அடித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை அடுத்த 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத பல்கலைக்கழகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. 



 
Top