GuidePedia

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நான்கு தலைவர்கள் பற்றிய விபரங்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர் சன்மானமாக வழங்கப்படும் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
அப்ட்- அல் ரஹ்மான் முஸ்தபா அல் குவாடுலி, அபூ மொஹமட் அல்- அட்னானி, டர்கான் டயூமுராசோவிச் பரிறவிஷ்வில்லா மற்றும் தாரிக் பின்- அல்- தஹார் பின் அல் ஃபாலிஹ் அல்- அவ்னி அல்- ஹர்ஷி ஆகியோர் தொடர்பான தகவல்களையே அமெரிக்க அரசு பொதுமக்களிடம் கேட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள நீதி வேலைத்திட்டத்திற்கான வெகுமானம் என்ற பட்டியலில் சந்தேக நபர்களின் பெயர்களை அமெரிக்க அரசு இணைத்துள்ளது.
மேலும் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அமெரிக்கா டெக்ஸாஸில் இடம்பெற்ற முகமது நபியின் கேலிச்சித்திரக் கண்காட்சியில் இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிப்பிரயோகம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது பாதூப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரு இளைஞர்களும் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐ.எஸ் தீவிரவாதிகள், தாமே குறித்த தீவிரவாத செயற்பாட்டை முன்னெடுத்ததாக பொறுப்பேற்றிருந்த நிலையில் தற்போது அமெரிக்க இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



 
Top