GuidePedia

இலங்கை நாணயத்தாளில் சுமார் 27 வருடங்களின் பின்னர், ஆங்கிலத்தில் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட 5000 ரூபா நாணயத்தாளில், மத்திய வங்கியின் ஆளுநரின் கையொப்பம் இவ்வாறு ஆங்கிலத்தில் இடப்பட்டுள்ளது.
1988ஆண்டில் மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய நெவில் கருணாரத்ன, அப்போது நாணயத்தாள்களில் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார். இதற்கு பின்னர் முதல்தடவையாக மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ஆங்கிலத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




 
Top