சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமார எனும் வேலே சுதாவுக்கு எதிரான வழக்கு இம்மாதம் 18ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேராவினால் எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், வெலே சுதாவுக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
வெலே சுதாவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கும் இடையில் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் வியாபாரியான வேலே சுதா பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். இவரது நெருங்கிய கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
