ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பானது கட்சியின் வாக்காளர் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தாது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் பலம் அண்மையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தல் வெளிப்படுத்தப்பட்டது.
எந்தவொரு சக்தியினாலும் கட்சியின் மக்கள் பலத்தை சீர்குலைக்க முடியாது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள் என லக்ஸ்மன் கிரியல்ல, கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது தெரிவித்துள்ளார்.
