GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாரை மாவட்டம் மருதமுனையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மைகோப் நிறுவனப் பணிப்பாளருமான சித்தீக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி, மருதமுனை பிரதேச இளைஞர் அமைப்பாளராக அன்மையில் கட்சியின் தலைவர் அமைச்சர் றிஸாட் பதியுதீனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை அன்மையில் அமைச்சர் வழங்கிவைத்தார்.

பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டுவரும் சித்தீக் நதீர் கல்முனைத் தொகுதியில் கட்சியின் புனரமைப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், இளைஞர் அமைப்புக்களை சந்தித்து கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகின்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வருகின்ற பொதுத் தேர்தலில் முதன் முறையாக அம்பாரை மாவட்டத்தில் வேட்பாளர்களை நிறுத்தி கட்சியின் விஸ்தீரணத்திற்காக வேலைத்திட்டங்களை வகுத்து செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



 
Top