GuidePedia

பாராளுமன்றத் தேர்தல் புதிய முறையில் நடைபெறாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

தற்போது அமுலில் உள்ள முறைமையில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த தேசிய நிறைவேற்றுப் பேரவை தீர்மானித்துள்ளது. 20ம் திருத்தச் சட்டத்தின் உத்தேச யோசனைத் திட்டம் அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைத் திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளாது இந்த திருத்தச் சட்டத்தை அவசரமாக அமுல்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் தொகுதி நிர்ணயத்தின் போது பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தலை எந்த முறையின் கீழ் நடாத்துவது என்பது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய நிறைவேற்றுப் பேரவையில் பழைய முறைமையில் தேர்தல் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்



 
Top