பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கை உரிய நடைமுறைக்கு மாறாக, சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்க தாக்கல் செய்திருந்த மனுவின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (05) அறிவித்தது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க, பிரியந்த விஜயவர்தன மற்றும் புவனெக்க அலுவிஹாரே ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணை செய்திருந்தனர்.
