GuidePedia

மத்தள விமான நிலையம் மூடப்படமாட்டாது என விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பதற்காக அமைச்சர் இன்று மத்தள விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
நாம் மத்தள விமான நிலையத்தை மூடப் போவதில்லை.  மத்தள விமான நிலையத்தை லாபகரமான வழிக்கு திருப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இது ஓர் வளமாகும்.
எந்தவொரு நாட்டுக்கும் மேலதிக விமான நிலையம் அவசியமானது. 
இலங்கை விமானங்களுக்கு மட்டுமன்றி வெளிநாட்டு விமானங்களக்கும் மாற்று விமான நிலையமாக மத்தள செயற்படும். அவசர நிலைமைகள் மற்றும் அனர்த்தங்களின் போது இவ்வாறு மத்தள விமான நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புதிய திட்டமொன்று வகுத்து மத்தள விமான நிலையத்தை லாபமீட்ட செய்ய முடியும் என ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.



 
Top