GuidePedia

இங்கிலாந்தின் சஃபோல்க் பகுதி அருகேயுள்ள இப்ஸ்விச் நகரை சேர்ந்தவர் பால் மேசன் (54). தபால்காரராக வேலை செய்து வந்த இவர் உலகின் அதிக எடை கொண்ட மனிதராக ஒரு காலத்தில் அறியப்பட்டவர்.
சுமார் 450 கிலோ எடையுடன் இருந்த இவர், உடல் பருமன் குறைப்பு சிகிச்சை மேற்கொண்டு உடலின் எடையை கணிசமாக குறைத்தார். எனினும், சதைதான் கரைந்ததேயொழிய, தோல் பகுதிகள் தனி உறுப்புகள் போல் தொங்கிக் கொண்டிருந்தன. தொடை மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் தொங்கிய சுருங்கிப்போன தோல் உடலுக்கு அதிக அசவுகரியத்தை ஏற்படுத்த, நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலியே கதியாக முடங்கிப்போனார்.
இவரது பரிதாப நிலையை அறிந்த டாக்டர் ஜெனிபர் கப்லா என்பவர் இவருக்கு நியூயார்க் நகரில் உள்ள லெனாக்ஸ் ஹில் ஆஸ்பத்திரியில் சமீபத்தில் இலவசமாக ஆபரேஷன் செய்து வைத்தார். இதையடுத்து தேவையில்லாத தோல் பகுதி வெட்டி எடுக்கப்பட்ட பின்னர் தற்போது பால் மேசன் சுயமாக எழுந்து நடமாட தொடங்கியுள்ளார்.



 
Top