வெசாக் பார்வையிட ஆட்களை ஏற்றிச் சென்ற சிறியரக உழவு இயந்திரம் ஒன்று பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புத்தளம் -அநுராதபுரம் பிரதான வீதியின் மீஓயா பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதென கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 3 குழந்தைகளும் உள்ளடங்குவர் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
