20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக புதிய முறையில் தேர்தல் நடத்த முடியாவிட்டால் பழைய முறையிலேனும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதளுவாவே சோபித தேரர் கோரியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்துவது குறித்து உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது.
எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்ளும் 20ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும்.
நாட்டு மக்களின் நன்மைக்காக 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதனைப் போன்று, 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி எந்த நேரத்திலும் நாடாளுமன்றைக் கலைத்து புதிய நாடாளுமன்றம் ஒன்றை நிறுவ முடியும் என மாதுளுவாவே சோபித தேரர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
