GuidePedia

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக, இங்கிலாந்து அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் ஜொனாதன் ட்ராட் அறிவித்துள்ளார்.
ட்ராட், 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 ஆயிரத்து 835 ரன்களும், 68 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்தி 819 ரன்களும் எடுத்துள்ளார்.
ஆஷஸ் தொடர்களிலும் பல டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தின் வெற்றிக்கு மூல காரணமாக ட்ராட் இருந்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு ஐசிசியால் சர்வதேச கிரிக்கெட் வீரராக கௌரவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்சிலும் விளையாடிய ட்ராட் 72 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மோசமான விளையாட்டு காரணமாக அவர் மீது பெரும் விமர்சனங்கள் எதுவும் எழாத நிலையில் "இது கடினமான முடிவுதான். ஆனால், இங்கிலாந்து அணிக்காக விளையாடும் அளவிற்கு என்னுடைய விளையாட்டு இல்லை என ட்ராட் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் முடிவை தெரிவித்துள்ளார்.



 
Top