GuidePedia

பொலிஸ் நிதி மோசடி பிரிவு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தேர்தலுக்கு முன்னர் அரசுக்கு எதிராக நிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைப்பதே என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:
பொலிஸ் நிதி மோசடி பிரிவு அரசியல் தேவைகள் கருதி அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
தேசிய நிறைவேற்று அதிகார சபை மூலம் அவர்களுக்கான உத்தரவு வழங்கப்படுகிறது. தண்டனைகளை தீர்மானிக்கும் இடமாக தேசிய நிறைவேற்று அதிகார சபை மாறியுள்ளது என அவர் தெரிவித்தார்.



 
Top