(றிப்கான் கே சமான்)
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மறிச்சுக்கட்டி, கத்தாங்கண்டல் பகுதியில் இன்று 07.05.2015 மாலை வயலில் வேலை செய்து கொண்டிருந்தவரே மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான கரடிக்குழி கிராமத்தில் வசித்துவந்த 38 வயதுடைய நபரே மேற்படி அணர்த்தத்திற்குள்ளாகியுள்ளார்.
இன்று மாலை வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மேற்படி அணர்த்தம் இடம் பெற்றுள்ளது.
ஊயிரிழந்தவரின் சடலம் மன்னார் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணையை சிலாவத்துறை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஏப்றல் மாதம் 19ம் திகதி இரவு இதே கிராமத்தின் வியாடிக்குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
