(க.கிஷாந்தன்)
புத்தரின் பிறப்பு, பரி நிர்வாணம் மற்றும் இறப்பை கொண்டாடும் முகமான வெசாக் தின கொண்டாட்டங்கள் 03.05.2015 அன்று முதல் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்படும் நிலையில் மலையகத்தில் அட்டனில் மிக விமர்சையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
மலையகத்தில் வெசாக் அலங்காரப்பந்தல்கள் 10 நிறுவப்பட்டுள்ளது. அத்தோடு பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள வெசாக் அலங்காரப் பந்தல்கள் 03.05.2015 அன்று இரவு உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டதுடன் மக்கள் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த வெசாக் அலங்கார பந்தல்கள் மற்றும் வெசாக் வலயங்களைப் பார்வையிட பல மக்கள் 03.05.2015 அன்று இரவு முதல் அட்டன் நகரின் வெசாக் வலயங்களுக்கு சென்று வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளளர்.
அட்டன் பகுதியில் நிறுவப்பட்டுள்ள வெசாக் பந்தல்கள் சிலவற்றை இங்கு காணலாம்.


