வில்பத்து தேசிய வன பிரதேசத்தை பாதுகாப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்க எதிர்பார்த்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
பொது பல சேனா அமைப்பினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
வில்பத்து தேசிய வன பிரதேசத்திற்கு அருகில் குடியேற்றங்கள் தொடர்பாக ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு வழங்கியது பாராட்ட வேண்டிய ஒரு விடயமாகும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
