GuidePedia

(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன்டிலரி தோட்டத்தை அண்மித்த ஆற்றில் சிறுமி ஒருவர் 05.05.2015 அன்று மாலை 5 மணியளவில் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். 
மேலும் இவ்வாறு அடித்து செல்லப்பட் சிறுமி ராஜா அபிசாந்தி 6 வயதுடைய சிறுமி என பொலிஸார் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.  
தாயுடனும் தந்தையுடனும் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு திரும்பும் போது கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் சென்ஜோன்டிலரி தோட்டத்தில் உள்ள ஓடையை கடக்கும் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியை தேடும் பணியில் நோர்வூட் பொலிஸார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அதன்பின் விழுந்த இடத்திலிருந்து சுமார் 15 அடி தூரத்தில் சிறுமி உயிரிழந்த நிலையில் பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சமபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



 
Top