GuidePedia

கௌதம புத்தர் பிறந்த வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் சிலருக்கு இன்று விடுதலை வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய தினம் சுமார் 500 பேருக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
சிறு குற்றங்கள் மற்றும் தண்டப் பணம் செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 



 
Top